கட்டுமான பணி தீவிரம் பூச்சி கொல்லி மருந்தை சுவாசித்த சிறுவன் பலி

ஈரோடு, செப். 28: கோபி அருகே உள்ள தாசம்பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஹரி பிரசாத் (16). இவன், பொலவக்காளி பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான்.விடுமுறை நாள்களில், வயல்களில் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கும் வேலைக்கு ஹரிபிரசாத் செல்வது வழக்கம். கடந்த 19ம் தேதி அப்பகுதியில் உள்ள வாழை தோப்பில் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கும் வேலைக்கு ஹரிபிரசாத் சென்றுள்ளான். மாலையில் வேலை முடிந்து வந்த பின் அவனுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பூச்சிக் கொல்லி மருந்தை சுவாசித்ததால் ரத்தத்தில் விஷம் கலந்து விட்டதாக கூறியுள்ளனர்.முதலுதவிக்குப் பின்னர், உயர் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிபிரசாத், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

Related Stories: