காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவள்ளூர், செப்.28: காந்தி ஜெயந்திக்கு மதுக்கடைகளை மூட வேண்டும், என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.

Related Stories: