பாளையில் 11 சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுப்பு திரளான பக்தர்கள் தரிசனம்

நெல்லை,  செப். 27: பாளையில் தசரா பண்டிகை முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 11  கோயில்களில் இருந்து புறப்பட்ட சப்பர வீதி உலா நேற்று காலை ஒரே இடத்தில் அணி வகுத்து நின்றது. பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். மைசூர், குலசைக்கு  அடுத்தபடியாக பிரம்மாண்டமாக நடைபெறும் பாளை தசரா பண்டிகை நேற்றுமுன்தினம்  தொடங்கியது. பகலில் ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு  ஆயிரத்தம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன்,  வடக்கு உசக்சிமாகாளி அம்மன், விஸ்வகர்ம உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு  உச்சினி மாகாளி அம்மன், யாதவர் தேவி உச்சினிமாகாளி அம்மன், தேவி  தூத்துவாரி அம்மன், உலகம்மன், புது உலகம்மன், ஆகிய 11 கோயில்களில் இருந்து  சிம்மவாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார்.

இந்த  சப்பரங்கள் பாளையில் உள்ள முக்கிய வீதிகளில் மேளதாளம் முழங்க விடிய விடிய  உலா வந்தன. தொடர்ந்து நேற்று காலை 11 சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயில்  முன்பும் தொடர்ந்து ராமசாமி கோயில் முன்பும் பின்னர் பாளை ராஜகோபாலசாமி  கோயில் முன் அணிவகுத்தன. அங்கு நடந்த தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான  பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து  10 நாட்கள் நவராத்திரி  திருவிழா நடக்கிறது. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் இரவு 12  சப்பரங்கள் அணிவகுப்பு நடக்க உள்ளது. இதுபோல் அன்றைய தினம் நெல்லை டவுன்  பகுதியில் 35 அம்மன் கோயில்களில் இருந்து சப்பரங்கள் அணிவகுக்கும் சக்தி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: