இலவச பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி, செப்.24: கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து பயிற்சி நிறுவன இயக்குநர் ஜெகன்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அணையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சியும், வங்கிக் கடனுக்கான ஆலோனைகளும் வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல், மென் பொம்மைகள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் பயிற்சி 13 நாட்கள், சிசிடிவி நிறுவுதல் மற்றும் பழுது பார்த்தல் 13 நாட்கள், மாடு வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் 10 நாட்கள், துரித உணவு தயாரித்தல் 10 நாட்கள், போட்டோஃகிராபி மற்றும் வீடியோ கிராபி 30 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள், பயிற்சி துவங்கும் நாளுக்கு முன்பு வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாதவர்கள் பயிற்சி துவங்கும் நாளில் நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர, 94422 47921 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் ஹாய் என்று டைப் செய்யலாம். அல்லது  https://bit.ly/ REETRAININGKRISHNAGIRI என்ற இணையத்தில் படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: