சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்

ஓசூர், ெசப்.24: ஓசூரில் ₹25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. ஓசூர் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட காளேகுண்டா பகுதி சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியின்றி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சில்பா சிவக்குமாரிடம் முறையிட்டனர். இதன்பேரில், அப்பகுதியில் ₹25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராஜூ, மண்டல தலைவர் புருஷோத்தமரெட்டி, முன்னாள் கவுன்சிலர்கள் பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: