கஞ்சா விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, செப்.22: பர்கூர் எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார் ஜெகினிகொள்ளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செங்கல் சூளை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வரதராஜ்(21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை எஸ்எஸ்ஐ நீலமேகம் மற்றும் போலீசார், பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நாகராஜ் என்பவரை கைது செய்தனர். கெலமங்கலம் எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், பஸ் நிலையத்தில் பெட்டிக்கடையில் சோதனை செய்து, அங்கிருந்த 45 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற ஜீவா நகரை சேர்ந்த அசோக்குமார் (23) என்பவரை கைது செய்தனர். உத்தனப்பள்ளி எஸ்ஐ பேட்ராயன் மற்றும் போலீசார் அலேசீபம் பஸ் ஸ்டாப்பில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பூவசரம்பட்டியைச் சேர்ந்த செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: