தரைப்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

குமாரபாளையம், செப்.7: குமாரபாளையம் நகராட்சி 30வது வார்டு அப்பன் பங்களா அருகே தரைப்பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலம் கட்டுமான பணிக்காக அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடந்த 6 மாதங்களாக நான்கு வழிச்சாலைக்கும், பள்ளிபாளையம் மற்றும் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் சென்றுவர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு, தரைப்பாலம் கட்டுமான பணியினை துவக்கி விரைவாக முடிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி அமைப்பாளர் சித்ரா பாபு, நகராட்சி ஆணையளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Related Stories: