சந்தானம் வித்யாலயா பள்ளியில் 29ம் தேதி தேசிய விளையாட்டு விழா

திருச்சி, ஆக. 27: திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வரும் 29ம் தேதி(திங்கட்கிழமை) பகல் 12 மணியளவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்புவிருந்தினராக கலந்து கொள்கிறார். இவர் 1983ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். மிகச்சிறந்த பன்முகத்திறன் ஆட்டக்காரர்களில் ஒருவரானவர். இந்தியா உருவாக்கிய மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் கபில் தேவ். டெஸ்ட் (சர்வதேச போட்டி) கிரிக்கெட்டில் 4,000 டெஸ்ட் ரன்கள் மற்றும் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற ஆல் ரவுண்டர் இரட்டையர்களை அடித்த உலகின் ஒரே கிரிக்கெட் வீரர். இத்தகைய சிறப்புமிக்கவர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

Related Stories: