கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆவணி மாதத்தில் களைகட்டும் கலை நிகழ்ச்சிகள்

கந்தர்வகோட்டை,ஆக.23: கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆவணி மாதத்தில் களை கட்டும் கலை நிகழ்ச்சியால் கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து கோயில் திருவிழாக்களிலும் ஆண்டு தோறும் கரகாட்டம், சிலம்பாட்டம், நாடகம், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வந்தனர். சில ஆண்டுகளாக ஒரு மாபெரும் கொரோனா தொற்றால் திருவிழாக்கள், கிடாவெட்டு, கோயில் பூஜைகள் தடைப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடைபெற வில்லை.

இப்பகுதியிலுள்ள கலை நிகழ்ச்சி கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு இல்லாமல் இருந்தது. சமீப காலமாக கலை நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஆடி மாதம் நடைபெற்ற அனைத்து கோயில்களிலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.  இதனால் கலைநிகழ்ச்சி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. இந்நிலையில் கந்தர்வகோட்டையில் உள்ள  முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுகிழமை கோயில் வளாகத்தில் விடையாத்தி நடைபெறும். அன்றைய தினம் மாபெரும் கலை நிகழ்ச்சி அந்த மண்டகப்படிதாரர்கள் நடத்துவார்கள். பொதுமக்களுக்கு சிறப்பான பொழுதுபோக்காக அமையும். கலை நிகழ்ச்சி கலைஞர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவும் அமையும்.

Related Stories: