கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வதற்கும் கட்டுப்பாடு விதித்த ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க கூடிய வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் முன்ஜாமின் கோரும் மனுக்களை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூலை 17 வரை கட்டுப்பாடுகள் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ராஜஸ்தான் ஐகோர்ட் விதித்த கட்டுப்பாட்டுக்கு தடை விதித்தது நீதிபதிகள் நாகேஷ்வரராவ், அனிருத்த போஸ் அமர்வு. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றமே மறு ஆய்வு மனுதாக்கல் செய்தது. காவல் துறையின் விசாரணை அதிகாரங்களுக்கு தனி நீதிபதியின் உத்தரவு கட்டுப்பாடு விதிப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முன்ஜாமீன் மனுக்களை ஏற்க வேண்டும் என்ற உத்தரவு தனிநபருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மீறுவதாகும்….

The post கொரோனா ஊரடங்கு காலத்தில் குற்றவாளிகளை போலீஸ் கைது செய்ய கட்டுப்பாடு விதித்ததற்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: