பாலில் உபபொருட்கள் தயாரிப்பு விளக்க பயிற்சி

நாமகிரிப்பேட்டை, ஆக.10: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம், அட்மா திட்டத்தின் கீழ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி மங்களபுரம் வருவாய் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்களை கொண்டு, விவசாயிகளுக்கு பால் மற்றும் பாலில் உப பொருட்கள் தயார் செய்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் ஜெயசத்யா கலந்துகொண்டு பால் மற்றும் பாலில் உப பொருட்கள் தயார் செய்வது குறித்து விளக்கமளித்தார்.

கால்நடை உதவி மருத்துவர் வித்யாசாகர், கால்நடைகளுக்கான அடர் தீவனங்களை குறைந்த செலவில், தங்களது வீடுகளிலேயே உற்பத்தி செய்வது குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சியில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மோகன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல், உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். அட்மா திட்ட தலைவர் ரவீந்திரன், விவசாயிகளுக்கு மதிப்பூதியம் வழங்கினார். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் செய்திருந்தார்.

Related Stories: