கும்பகோணம் விளையாட்டு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத கரக உற்சவம்

கும்பகோணம், ஆக.10:கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயில் திருமஞ்சன வீதியில் விளையாட்டு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34வது ஆண்டாக நேற்று ஆடி மாத கரக உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 2ம் தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மூல மந்திர ஹோமம் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.  தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருமஞ்சன வீதி காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்திகரகம், வேல் தீச்சட்டி, பால்குடம், அலகு காவடியுடன் திரளான பக்தர்கள் புறப்பட்டு, மாநகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.

தொடர்ந்து, மதியம் அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகமும், மாலை சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி கஞ்சி வார்த்தல் மற்றும் விடையாற்றியுடன்இந்த ஆண்டு திருவிழா முடிவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா குழுவினர் திருமஞ்சன வீதி இளைஞர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: