விருது வழங்கும் விழா

காரைக்குடி, ஆக. 6: காரைக்குடியில் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி கிளை (கேஎம்சி) சார்பில் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த மருத்துவர்கள் 33 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடந்தது. கேஎம்சி கிளை தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தலைமை வகித்து விருதுகள் வழங்கினார். முன்னாள் தேசிய செயலாளர் ஜெயலால், முன்னாள் மாநில தலைவர் கனகசபாபதி, மூத்த துணை தலைவர் சிங்காரவேல், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர்  உள்பட பலர் கலந்து கொண்டனர். கேஎம்சி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

Related Stories: