ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

ஊத்தங்கரை, ஆக.6: ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில், ரயில்வே தரைப்பாலம் கடந்த 2013ம் ஆண்டு பெங்களூரு-பாண்டிசேரி சாலையில் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக, நீர் வெளியேறும் பாதையை தண்ணீர் அடைத்ததால், தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

கர்நாடகாவிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பிரதான வழித்தடம் என்பதால், பெங்களூருவில் இருந்து வரும் பல வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன், தேங்கிய தண்ணீரில் 2 கர்நாடக பஸ்கள் தண்ணீரில் மாட்டிக்கொண்டது. கடும் சிரமத்திற்கு இடையே, பஸ்கள் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. இதனால், தரைப்பாலத்தை தவிர்த்து வாகனங்கள் 10 கி.மீ தொலைவு சுற்றி செல்கிறது. எனவே, பாலத்தில் இருந்து தண்ணீர் வெளியேற வடிகால் வசதி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: