கலெக்டர் தகவல் முசிறியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

முசிறி: முசிறி பகுதியில் கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். முசிறி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார் முசிறி நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டும், ரோந்து பணி சென்றும் கண்காணித்தனர். அப்போது முசிறி பைபாஸ் ரோட்டில் வந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை சோதனை செய்த போது, 3 பேரிடமும் 3 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முசிறி போலீசார் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், தொட்டியம் அண்ணா நகர் அரசலூர் பகுதியை சேர்ந்த வசந்த் என்கிற லூர் வசந்தன் (23), தொட்டியம் திருநாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (23), தொட்டியத்தை சேர்ந்த கோகுல்நாத் (19) என்பது தெரிய வந்தது. வாலிபர்களுக்கு கஞ்சா எங்கே கிடைக்கிறது. சப்ளை எவ்வாறு செய்யபடுகிறது என்பது குறித்து மூன்று வாலிபர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். படிக்கும் வயதில் உள்ள வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: