விழிப்புணர்வு உறுதிமொழி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக மாவட்ட அளவிலான உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமண ராஜூ, பாலசுப்ரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, சூரக்குடி மருத்துவ அலுவலர் ஆதித்யா, மருத்துவர் ஷாஜிதா ஆகியோர் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினர். உலக தாய்ப்பால் வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. தாய்ப்பால் மட்டுமே வழங்கியதால் வயதுக்கேற்ற சரியான எடை இருந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் மரிய ஆன்சி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சூர்யா, பஞ்சவர்ணம், கமலி மீனாள், அமுதா, தாரணி, வட்டார அளவிலான போஷான் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: