2782 மூட்டை பருத்தி ₹1.2 கோடிக்கு விற்பனை

மல்லசமுத்திரம், ஆக.5: மல்லசமுத்திரம் கிளையில் 2782 மூட்டை பருத்தி ₹1.2 கோடிக்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2782 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் ₹10,620 முதல் 11311 வரையும், அதேபோல் பிடி ரகம் ₹10,400 முதல் 11340 வரையும், கொட்டு பருத்தி ₹4909 முதல் 9100 வரை விற்பனையானது. மொத்தம் ₹1.02 கோடிக்கு விற்பனையானது. அடுத்த பருத்தி டெண்டர் 10ம் தேதி நடக்கிறது என சங்க செயலாளர் மாணிக்கம் தெரிவித்தார். ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1305 மூட்டை பருத்தி ₹45 லட்சத்திற்கு விற்பனையானது.   

ராசிபுரம் வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்கத்தின் கிளையான ராசிபுரத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ராசிபுரம், புதுப்பாளையம், வடுக முனியப்பன் பாளையம், சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1305 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க அவிநாசி, அன்னூர், திருப்பூர், கோவை, திருச்செங்கோடு,  மல்லசமுத்திரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் ஆர்.சி.ஹச் ரகம் அதிகபட்சம் ₹11,342க்கும், குறைந்தபட்சம் 9369க்கும், சுரபி ரகம் அதிகபட்சம் ₹11,242க்கும், குறைந்த பட்சம் ₹9312 க்கும், கொட்டு ரகம் அதிகபட்சம் ₹8005க்கும், குறைந்தபட்சம் ₹6505க்கும் விற்பனையானது. மொத்தம் ₹45 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Related Stories: