ஆடிபூர விழாவையொட்டி சேந்தமங்கலம் காளியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்

திருவாரூர், ஆக.2: திருவாரூர் அருகே சேந்தமங்கலம் காளியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆடிபூர விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் தெட்சிண காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடிப்பூர விழாவா கடந்த மாதம் 17ம் தேதி விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இதன் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா என்பது நேற்று நடைபெற்றது. திருவாரூர் கீழவீதி பழனி ஆண்டவர் கோயிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த பால்குட ஊர்வலம் 2 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மேற்படி கோயிலை அடைந்தது. பின்னர் அங்கு அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகாஅபிஷேகம் நடைபெற்றது.

Related Stories: