விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு வளையல் அலங்காரம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

விராலிமலை,ஆக.2: விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு ஆடி பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் அலங்காரம் செய்து சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது.

விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வமானது விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாரதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடி பூரத்தை முன்னிட்டு மெய்கண்ணுடையாள் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் ஆண்டாள் வடிவத்தில் வளையல் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் பெற்று சென்றனர்.

Related Stories: