சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மின்சார பெருவிழா

அருப்புக்கோட்டை, ஜூலை 30: சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டை கல்லூரியில் மின்சார பெருவிழா நடைபெற்றது.

இந்தியாவின் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சகமும் மின்சார வாரியமும் இணைந்து ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம், மின்சக்தி 2047 என்ற விழாவினை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை செளடாம்பிகா பொறியியற் கல்லூரியில் மின்சார பெருவிழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் செல்வக்குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். விருதுநகர் மின்பகிர்மான மேற்பார்வைபொறியாளர் தேன்மொழி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் துறை தலைமை மேலாளர் முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்யாய கிராம் மோதி யோஜனா திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த மின்மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து பேசினர்.

மேலும் மத்திய மாநில அரசின் மூலம் மின்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து காணொளி மூலம் ஒளிபரப்பபட்டு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. உதவிசெயற் பொறியாளர் பத்மநாபன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிசெயற் பொறியாளர் சிவக்குமார், சீனிவாசன், உதவி பொறியாளர்கள் பிரபாகர், சேதுராமன், சேகர், சரவணன், பழனிராஜா, மணிஅரசி, கவிதா, சுரேஷ், பசுவநாதன், ரகுபதி, கீதா தேவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் செயற்பொறியாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: