சின்னமனூர் வயல்களில் களை பறிக்கும் பணி: விவசாயிகள் தீவிரம்

சின்னமனூர், ஜூலை 27: சின்னமனூர் பகுதியில் நெல் வயல்களில் களைக்கொல்லி மருந்து தூவுதல் மற்றும் களை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் இருபோக நெல் சாகுபடி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூன் முதல் தேதி திறக்கப்பட்ட முல்லைப் பெரியாற்று பாசனத்தின் வாயிலாக கடந்த ஒரு மாத மாக முதல் போகத்திற்கான நெல் நடுப்பணியினை  துவக்கி வேகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி  30 நாட்கள், 20 நாட்கள், பத்து நாட்கள் என 3 விதமான  பயிராக தற்போது வளர்ச்சிப் பணியில் தீவிரமாக இருக்கிறது.

   ஏற்கனவே வெளிமார்க்கெட்டில் வாங்கிய நெல் விதைகள் தரமற்றதாக போனதால் கடும் பாதிப்போடு பெரும் நட்டத்தினை எட்டிய விவசாயிகள் தமிழக அரசு உத்தரவில் வேளாண்மை துறையின் வழிகாட்டுதலின் விளைவாக தற் போது கம்பம் பள்ளத்தாக்கு மண்ணின் தன்மைக்கு ஏற்றார் போல் நெல் விதைகளை விதைத்துள்ளனர். தற்போது நாற்று வளர்ந்து களைகளை தவிர்க்கும் வகையில் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து களைகள் பறிப்பிற்கு பிறகு நெல் நாற்றுக்களின் வளர்ச்சி அபாரமாக மாறி வேகமாக ஆரோக்கியமாக வளர்வதற்கு பெரும் வழிகாட்டியாக  இருக்கிறது.

விவசாயிகள் கூறுகையில், நடவு முடிந்தவுடன் நெற் பயிர்கள் வளர்கின்ற போது களைகளும் சேர்ந்து வளர்வதால் நெல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் சரிவர கிடைக்காததால் அரசு களைகளை மக்க செய்வதற்கு களைக் கொல்லி மருந்து தருவதால் அதன் வாயிலாகவே மக்க வைத்து நெற் பயிர்களை காத்து வருகின்றோம் என்றனர்.

Related Stories: