கோயில் கும்பாபிஷேக விழா

போச்சம்பள்ளி, ஜூன் 11: மத்தூர் அருகே கொத்தக்கோட்டையில் உள்ள தேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷே பெருவிழா நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கோபுரம், உடன் பரிவாரங்களுக்கும், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, சீனிவசா பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: