குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

ஈரோடு, ஜூன் 11:  சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், ‘14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன்’ என அனைத்து துறை அலுவலர்களும் உறுதி மொழி ஏற்றனர். இதில், ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாச்சலம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சசிகலா, உதவி ஆணையர்கள் முருகேசன், திருஞானசம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: