ராஜராஜேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி, ஜூன் 9: இடைப்பாடி அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி ராஜராஜேஸ்வரி, கந்தடியம்மன், ஐய்யனாரப்பன், வீரகாரன், விநாயகர், பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேக விழா, இன்று துவங்கி நாளை (10ம்தேதி) வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று காலை, கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து தாரை, பம்பை மேளம் முழங்க கோனேரிப்பட்டி, பூமணியூர், தண்ணிதாசனூர் வழியாக கோயிலு்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா பாதுகாப்பு பணியில் தேவூர் போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: