மோட்டார் வயர் திருடிய இருவர் கைது

நாமகிரிப்பேட்டை, ஜூன் 8: நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆத்தூர் மெயின் ரோடு வழியாக வந்த வாலிபர்கள் இருவர் கையில், மோட்டார் வயர் வைத்திருந்தார். சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து, இருவரையும் மங்களபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தாண்டாகவுண்டன்புதூரை சேர்ந்த உலகநாதன் மகன் கந்தன்(35),  மணி மகன் சத்யராஜ்(25) என்பது தெரிய வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரின் தோட்டத்தில் இருந்து, மோட்டார் வயர் மற்றும் ஸ்டார்டரை திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வயரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: