பஸ் கண்ணாடியை உடைத்த

லாரி டிரைவர் அதிரடி கைதுசேந்தமங்கலம், ஜூன் 8:கொல்லிமலை அரியூர் நாடு தெம்பளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (30). அதே பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார்(35). என்பவர் போதையில் சில்லி சிக்கன் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், அங்கிருந்த கத்தியை எடுத்து, சரவணனின் கழுதை அறுத்து விடுவதாக மிரட்டியுள்ளார். கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார், அருண்குமாரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: