பறக்கும் படையினர் ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜூன் 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தலைமையில், துணை பதிவாளர் ராஜதுரை, சரக துணை பதிவாளர் செல்வம், 12 கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் 7 முதுநிலை ஆய்வாளர்களை கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 65 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவறிழைத்த கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போல் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சோதனைகள் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: