சுற்றுச்சூழல் தினம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

கரூர், ஜூன் 8: சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. மரம் நடும் விழாவை மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், அனைத்து நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சார்பு நீதிபதி பாக்கியம் செய்திருந்தார். இந்த நிகழ்வில், நீதிமன்ற வளாகத்தை சுற்றிலும் 62 மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: