சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓசூரில் மாரத்தான் போட்டி

ஓசூர், ஜூன் 6:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மண் காப்போம் மனித வளம் காப்போம் என்ற தலைப்பில், ஓசூர் சிப்காட் லயன்ஸ் கிளப், ஓசூர் என்எச்ஆர்டி மற்றும் ஐஎம்ஏ இணைந்து மினி மாரத்தான் போட்டியை நேற்று ஓசூரில் நடத்தினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மேயர் சத்யா, ஓசூர் ஏஎஸ்பி அரவிந்த், ஆர்டிஓ தேன்மொழி, தொழிற்சாலைகளின் இணை இயக்குனர் (பாதுகாப்பு, சகாதாரம்) சபீனா, ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் சென்னீரப்பா, நாகராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். ஓசூர் ஓட்டல் ஹில்ஸ் வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி, சிப்காட் வழியாக சென்று மீண்டும் ஓட்டலில் நிறைவடைந்தது. 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டி ஆண் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ ஓட்டம், 5 கி.மீ ஓட்டம் என நடைபெற்றது. மேலும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கலந்து கொள்ளும் விதமாக 5 கி.மீ நடையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்களுக்கான 10 கி.மீ போட்டியில் முதல் பரிசாக ₹10 ஆயிரம், 2வது பரிசாக ₹7500, 3ம் பரிசாக ₹5000ம், 5 கி.மீ போட்டியில் முதல் பரிசாக ₹5000, 2வது பரிசாக ₹3000, 3வது பரிசாக ₹1500 வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரகாஷ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினர்.

Related Stories: