அரியலூர் டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் மது விற்பனை கண்டித்து கவுன்சிலர் கணவர் தர்ணா

அரியலூர், ஜூன் 2: அரியலூர் பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி அரியலூர் நகராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலர் ராணியின் கணவர் சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையிலேயே கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்க வலியுறுத்தி திமுக கவுன்சிலரின் கணவர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: