கரூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

கரூர், மே24: கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதுகலை தமிழ்த்துறை மாணவர் நாகராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி தலைமை வகித்தார். இலக்கிய மன்ற நிகழ்வு குறித்து தமிழ்த்துறை தலைவர் சுதா கலந்து கொண்டு பேசினார். திருப்பத்தூர் தனியார் கல்லூரி முதுநிலை மற்றும் ஆய்வுத்துறை உதவி பேராசிரியர் பார்த்திபராஜா கலந்து கொண்டு, வீழ்வேன் என நினைத்தாயோ? என்ற தலைப்பில் பேசினார். முதுகலை மாணவி தீபா நன்றி கூறினார். விழாவில், தொடர்ந்து, தற்காலிக சூழலில் மாணவர்களின் கல்வி என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் தமிழ்த்துறையின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Related Stories: