தென்னை விவசாயிகளுக்கு மானியம்

திருச்செங்கோடு, மே 14: எலச்சிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  எலச்சிபாளையம் வட்டாரத்தில் தென்னை மரங்களில் காய்ப்பு குறைவாக, பூச்சி நோய் தாக்கிய மரங்கள் மற்றும் வளர்ச்சி இல்லாத மரங்களை அகற்றுவதற்கு இழப்பீடாக ஒரு மரத்திற்கு ₹1000 வீதம் அதிகபட்சம் ஒரு ஹெக்டருக்கு ₹32 ஆயிரம் வரையும், மறு நடவு செய்வதற்கு ஒரு தென்னம்பிள்ளைக்கு 40 சதவீதம், அதிகபட்சம் ஒரு ஹெக்டருக்கு ₹4 ஆயிரம் வரை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உரங்கள் இட்டு, களையெடுத்து பராமரிப்பதற்கு ஆண்டு ஒன்றிற்கு ₹8750 வீதம், இரண்டு ஆண்டிற்கு ₹17500 வரை மானியம் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்கள் தேவைப்படின் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையும், வட்டார விரிவாக்க மையத்தையும் அணுகலாம் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: