ராசிபுரம் நகராட்சியில் தினசரி மார்க்கெட் இடமாற்றம்

ராசிபுரம், மே 13: ராசிபுரம் நகரம் கடைவீதியில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு புதிதாக கட்டிடம் கட்டுவதால், அங்குள்ள வியாபாரிகள் மாற்று இடம் தருமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நகரமன்ற தலைவர் கவிதா சங்கர், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி இடத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தற்காலிகமாக தினசரி மார்க்கெட் இயங்குவதற்கு போதிய வசதிகளை செய்து தருவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கிருபாகரன், நகரமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி, அவை தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: