செல்போனில் போட்டோ எடுத்து சிறுமியிடம் பலாத்கார முயற்சி போக்சோவில் வாலிபர் கைது

புதுச்சேரி,  ஏப். 28: புதுச்சேரி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று அதை செல்போனில்  போட்ேடா எடுத்து மிரட்டிய வாலிபரை உருளையன்பேட்டை போலீசார் போக்சோவில்  அதிரடியாக கைது செய்துள்ளனர்.  புதுச்சேரி, சாரம், வெண்ணிலா நகரை  சேர்ந்தவர் கார்த்திக் (22). வில்லியனூரில் டிஜிட்டல் பேனர் கடை  வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகாததால் உறவினர்கள் வரன் பார்த்து வந்ததாக  கூறப்படுகிறது. நகர பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கார்த்திக்  அவ்வப்போது சென்று வந்துள்ளார். தந்தை இல்லாத தாயின் பராமரிப்பில் இருந்த  13 வயது சிறுமியிடம் (8ம் வகுப்பு மாணவி) கார்த்திக் நெருங்கி பழகியதோடு  வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பலாத்காரம் செய்ய முயற்சித்து அதை தனது  செல்போனில் போட்டோ எடுத்ததாக தெரிகிறது.

 இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி  தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அச்சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்தது  தொடர்பாக சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் உறவினர்கள் தரப்பில்  முறையிடப்பட்டது. தொடர்ந்து  குழந்தைகள் நல  பாதுகாப்பு குழு உதவியுடன் சட்டம்- ஒழுங்கு போலீசில் முறையிட  அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில்  உருளையன்பேட்டை காவல் நிலையத்தில்  முறையிடப்பட்டது. சீனியர் எஸ்பி  தீபிகா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார், போக்சோ  பிரிவில் கார்த்திக் மீது வழக்குபதிந்து தலைமறைவாக இருந்த அவரை  தேடிவந்தனர். இதற்கிடையே அவரை அதிரடியாக கைது செய்ததோடு செல்போனை பறிமுதல்  செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில்  அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்குபின் தாயிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories: