பொதுமக்கள் மகிழ்ச்சி குழிபிறை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

திருமயம், ஏப்.26: திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. குழிபிறையில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ செல்வி கலந்துகொண்டார். இதில் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஊராட்சி தேவையான வளர்ச்சி பொதுமக்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் திருமயம் தாசிதார் பிரவீணா மேரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், குமரன், ஊராட்சி செயலர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் செந்தில், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதே போன்று திருமயம் ஊராட்சியில் தலைவர் சிக்கந்தர் தலைமையிலும், கோட்டையூர் ஊராட்சியில் தலைவர் ராமதிலகம் மங்கள் ராமன், மேலப்பனையூர் ஊராட்சி மேகநாதன், புலிவலம் ஊராட்சி கருப்பாயி, அதே போன்று அனைத்து ஊராட்சிகளிலும் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பாக முக கவசம் வழங்கப்பட்டது. சில ஊராட்சிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைத்து ஊராட்சிகளிலும் விரிவாக்க அலுவலர்கள் பார்வையாளராக கலந்துகொண்டனர். இதேபோல் அரிமளம் ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Related Stories: