பெரியகுளத்தில் மண்புழு தயாரிப்பு கூடத்திற்கு பூமி பூஜை

பெரியகுளம், ஏப். 23:பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை தனியாக பிரித்தெடுத்து, அதன் மூலம் மாதத்திற்கு 10 டன் மண்புழு உரம் தயாரிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை முழுமையாக பயன்படுத்தி, அதன்மூலம் மாதத்திற்கு 25 டன் மண்புழு உரம் தயாரிக்க ரூ.45 லட்சம் செலவில் புதிய கூடம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பூமி பூஜை போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்பொழுது மண்புழு உரம் தயாரிக்க குப்பைகளை பிரித்தெடுக்க புதிதாக இயந்திர தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதால், மாதந்தோறும் 100 டன் குப்பைகளிலிருந்து 30 முதல் 35 டன் மண்புழு உரம் தயாரிக்கப்படும் என நகராட்சி செயற்பொறியாளர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜாமுகமது, ஓ.சண்முகசுந்தரம், பிரேம்குமார், குமரன் மற்றும் திமுக நிர்வாகிகள், வழக்கறிஞர் சிவா கந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பொறியாளர் சண்முகவடிவு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: