பிரதமர் மோடி படம் வைக்க பாஜ முயற்சி ரேஷன்கடை முன் பெண்கள் திடீர் தர்ணா

திருச்சி, ஏப்.21: திருச்சி பொன்னகர் காமராஜர்புரத்தில் அமராவதி கூட்டுறவு நியாய விலைக்கடையில் நேற்று வழக்கம்போல் விற்பனையாளர் சண்முகம் மற்றும் எடையாளர் பணியில் இருந்தனர். இந்நிலையில் திடீரென பிராட்டியூரை சேர்ந்த கன்டோன்மென்ட் பாஜ மண்டல் தலைவர் பரமசிவம் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடியின் உருவப்படத்துடன் வந்து அனுமதியின்றி கடைக்குள் புகுந்து சுவற்றில் ஆனி அடித்து படத்தை மாட்டினார்.

அப்போது அங்கிருந்த பெண்கள் ஏன் அனுமதியின்றி படத்தை மாட்டுகிறீர்கள் என கேட்டு சத்தமிட்டனர். தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் அங்கு திரண்டு மோடி படத்தை அகற்றினர். அப்போது இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

தகவலறிந்த கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாஜகவினர் அங்கிருந்து செல்லகோரி திமுகவினர் மற்றும் அப்பகுதி பெண்கள் கடைமுன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து திமுகவினர் மற்றும் பாஜவினர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: