பரமக்குடியில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு

பரமக்குடி, ஏப்.20: பரமக்குடி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கீழ முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி ரோட்டரி சங்க தலைவர் பரசுராமன் தமைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முதன்மை ஆளுநர் சாதிக்அலி, துணை ஆளுநர் கோவிந்தராஜ், கீழ முஸ்லீம் ஜமாத் சபை தலைவர் ரபி அகமது, கே.ஜே.இ.எம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சாதிக்பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அப்துல்அஜிஸ் அனைவரையும் வரவேற்றார். இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி, ரோட்டரி பட்டய தலைவர் தினேஷ்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கீழ முஸ்லீம் பள்ளிவாசல் இமாம் ஜமாலுதீன் நோன்பு குறித்து விளக்கி பேசினார்.

மேலும் நிகழ்ச்சியில் உலகநாதபுரம் குழந்தை இயேசு ஆலய பங்குபணியாளர் சிங்கராயர், ஆயிர வைசிய சபை தலைவர் ராசிபோஸ், கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் அஜ்மல்கான், நகர் மன்ற உறுப்பினர் ஜீவரெத்தினம், திமுக பொதுக்குழு உறுப்பினர் அருளானந்து மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் காசிம் முகமது, அப்துல்மாலிக், ஜாகிர்உசேன், அப்துல்ஜப்பர், அன்வர்ராஜா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பரமக்குடி ரோட்டரி செயலாளர் ஜெபின்ஜோஸ் நன்றி கூறினார்.

Related Stories: