ராயக்கோட்டையில் வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

ராயக்கோட்டை, ஏப்.20: ராயக்கோட்டையில் சுகாதார திருவிழா மற்றும் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. முகாமிற்கு கெலமங்கலம் சேர்மன் கேசவமூர்த்தி, ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் கெஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். கிருஷ்ணகிரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன் திட்டத்தை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்பி தலைமை தாங்கி பேசினார். அதனைத் தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு காப்பீட்டு நிதியுதவி, மகப்பேறு பரிசுப்பெட்டகம் வழங்கினார். நிகழ்ச்சியில் கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார், டாக்டர்கள் மூர்த்தி, சங்கீதா. கெலமங்கலம் பிடிஒ.தமிழரசன், பெற்றோர் ஆசிரியரகழக தலைவர் நாகராஜன், செயலாளர் குஜ்ஜப்பன் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள்,  கர்ப்பிண பெண்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: