மாஜி வீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகிக்கிறார். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர் தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து, குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: