தேவகோட்டை சிவன் கோயிலில் தெப்பத்திருவிழா

தேவகோட்டை, ஏப்.19: தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 7ம் தேதி காலையில் கொடியேற்றப்பட்டு  மாலை சுவாமிகளுக்கு காப்பு கட்டி தொடங்கப்பட்டது. தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று  வந்தது.  பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடை பெற்றது. நேற்று 11ம் திருநாளில் கோவில் முன்பு உள்ள ஊரணியில் தெப்பம் அலங்கரிக்கப்பட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளினர். ஊரணியில் தெப்பம் சுற்றி வந்தது. இந்நிகழ்ச்சியில்   பெண்கள், ஆண்கள்  திருமணம் ஆக வேண்டும் என்றும், திருமணம் ஆனவர்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு ஊரணி படித்துறையில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: