கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வெயிலால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது பெய்து வரும் மழையால், இரவு நேரங்களில் குளிர்காற்று வீசுவதால் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கே.ஆர்.பி.அணைக்கு நீர்வரத்து 62 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 183 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 114 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில், 42.10 அடியாக உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக போச்சம்பள்ளியில் 22.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாரூர் 19.2, ராயக்கோட்டை 17, நெடுங்கல் 14, பெனுகொண்டாபுரம் 12.2, கிருஷ்ணகிரி 10.8, அஞ்செட்டி 4.8, தேன்கனிக்கோட்டை 2, தளி 2 என மொத்தம் 104.2 மிமீ மழை பதிவாகி இருந்தது.

Related Stories: