நாங்குநேரி ஒன்றிய கிராமப்புற மாணவர்கள் வசதிக்காக புதிய பஸ் சேவை தொடக்கம்

நாங்குநேரி, ஏப்.2:  நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து முனைஞ்சிபட்டி, காடன்குளம், விஜயநாராயணம் வழியாக திசையன்விளைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள், கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் பஸ் இயக்க ேகாரி விஜயநாராயணம் பகுதி மக்கள் போராட்டம் அறிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தற்போது பள்ளிகள் திறந்து செயல்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பள்ளி செல்வதற்கு ஏதுவாக காலை நேரத்திற்கு பஸ் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌமியா ஆரோக்கிய எட்வின் தொடர் முயற்சியால் நேற்று முதல் புதிய பஸ் ேசவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் காடன்குளத்தில் இருந்து புறப்பட்டு திருமலாபுரம், முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி,தினையூரணி, வடக்கு விஜயநாராயணம், ஆண்டார்குளம், விஜயஅச்சம்பாடு, இட்டமொழி வழியாக திசையன்விளை வரை இயக்கப்படுகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறுவர்.

இதற்கு உறுதுணையாக இருந்து முழுமுயற்சி எடுத்த நாங்குநேரி ஒன்றிய சேர்மன் சௌமியா ஆரோக்கியஎட்வின், ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியஎட்வின், மாவட்ட கலெக்டர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: