ஏற்காட்டில் பூத்து குலுங்கும் காப்பி மலர்கள்

ஏற்காடு, ஏப்.2:  ஏற்காட்டில் கமலா ஆரஞ்சு, பலா, பேரிக்காய், மிளகு மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன. ஏற்காட்டில் அரோபிகா மற்றும் ரோபஸ்டொ என்ற இருவகை காப்பி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை காப்பி கொட்டைகள் அறுவடை செய்யப்படும். தற்போது மீண்டும் விளைச்சலுக்காக காப்பி செடியில் பூக்கள் பூத்துள்ளன. இந்த காப்பி மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Related Stories: