புரவலர் டாக்டர் முத்துகருப்பனுக்கு பாராட்டு

புதுக்கோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் இயங்கி வரும் பழமையான சுப்பராம்மையர் நடுநிலைப்பள்ளியை புரவலர் திட்டத்தின்கீழ் திமுக வடக்கு மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துகருப்பனின் சொந்த செலவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்த பணிகள் முடிந்த நிலையில் டாக்டர் முத்துகருப்பனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் வளர்ச்சிக்குழு செயலாளர் ரவி பல்லவராயர் தலைமை வகித்தார். செயலாளர் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான் முன்னிலை வகித்தார். சொந்த செலவில பள்ளியை சீரமைத்த டாக்டர் முத்துகருப்பனுக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: