அம்பாசமுத்திரம் ஆசிரியர் கூட்டுறவு சங்கம் ரூ.24.41 கோடி கடன் வழங்கல்

நெல்லை, மார்ச் 23: அம்பாசமுத்திரம் தாலுகா அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவு நாணய சங்கம் நடப்பு ஆண்டில் ரூ.24.41 கோடிக்கு கடன் வழங்கி உள்ளது. இச்சங்கத்தில் 97 பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலர்களாக 635 உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களின் பங்குத்தொகையாக ரூ.3.92கோடியும், உறுப்பினர்களின் சிக்கன நிதியாக ரூ.6.34 கோடியும், நிரந்தர தொடர் வைப்பு நிதியாக ரூ.11.03 கோடியும் பெற்றுள்ளது. உறுப்பினர்களுக்கு மத்திய கால கடனாக ரூ.24.41 கோடிக்கு கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது. 2020-21ம் ஆண்டு வரை இறுதி தணிக்கை முடிந்து இச்சங்கம் 79.56 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக 14 சதவீத பங்கு ஈவு உறுப்பினர்களுக்கு வழங்கி வருகிறது. இச்சங்கத்தின் தலைவா் இம்மானுவேல், துணைத்தலைவர் அண்ணாத்துரை, செயலாளர் சரிபுன்னிஸா, கணக்கர் குட்டியம்மாள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பரமசிவன், செல்வஜோதி பிரகாஷ், நிர்மல் அமல்ராஜ், மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், லில்லிபுஷ்பம், ராஜம், பிரின்ஸஸ், ஆனந்தகுமார், சண்முகையா ஆகியோர் நிர்வாகம் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகவலை திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கோ.மோகன் தெரிவித்தார்.

Related Stories: