திருப்பூர், மார்ச் 2 : முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருமுருகன்பூண்டி நகர திமுக சார்பில் 50 இடங்களில் கட்சிக்கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. திருமுருகன் பூண்டிநகர செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். திருமுருகன்பூண்டி உள்பட தண்ணீர்பந்தல் காலனி, அம்மாபாளையம், ராக்கியாபாளையம், அணைப்புதூர் உள்பட50 இடங்களில் முன்னாள் நகரச் செயலாளர் குமார் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில் நகர துணை செயலாளர் மூர்த்தி, கிளை செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 23 வதுவார்டு கவுன்சிலர் பூங்கோதை வரவேற்றார்.