பஞ்சகாவ்யா செயல் விளக்க முகாம்

காவேரிப்பட்டணம், பிப்.26: காவேரிப்பட்டணம் அருகே கால்வேஹல்லி கிராமத்தில், அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  மாணவிகள் கிராமம் தங்குதல் முகாமில் கலந்து கொண்டு, அப்பகுதி விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா செயல்முறை விளக்கத்தை எடுத்துக்கூறினர். மேலும், அவர்கள் பஞ்சகவ்யாவின் நன்மைகள் குறித்தும் அதனால் பயிர்கள் வேதி உரங்கள் இல்லாமலே  பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி செழித்து வளரும் என்பதையும் எடுத்துரைத்தனர். முகாமில் அதியமான் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் லக்ஷ்மனகுமார் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

Related Stories: