பெரம்பலூர் நகராட்சி 12வது வார்டில் தெருவுக்குத்தெரு புகார் பெட்டி, தேடிச் சென்று தீர்வு

பெரம்பலூர், பிப்.12: தெருவுக்குத்தெரு புகார் பெட்டி வைத்து தேடிச் சென்று தீர்வு காணப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி 12வது வார்டு திமுக வேட்பாளர் சசி இன்பென்டா வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.பெரம்பலூர் நகராட்சியின் 12வது வார்டில் சுப்ரமணிய பாரதியார்தெரு, புனித. பனிமய மாதா காலனி, நிர்மலா நகர், மேட்டுத்தெரு, கம்பன்தெரு, ராமப்பிள்ளை நகர், காவேரி நகர், காயிதே மில்லத்தெரு, பூசாரித்தெரு, பள்ளிவாசல் தெரு, காமராஜர் வளைவு, முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் 2,727 வாக்காளர்கள் உள்ளனர். நடைபெறும் தேர்தலையொட்டி 12வது வார்டில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக திமுக வேட்பாளர் அ.சசி இன்பென்டா போட்டியிடுகிறார். இவர் கணிதத்தில் எம்எஸ்சி, பிஎட் பட்டம் பெற்றவர். திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநிலத் தலைவர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ ஆகியோரின் ஆசிபெற்ற வேட்பாளரான இவருக்கு உதய சூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டி தீவிரமாக வாக்கு களைச் சேகரித்து வருகிறார்.

அப்போது, 12வது வார்டிலுள்ள முக்கிய தெருக்களில், பொதுமக்களின் குறைகளை களைவதற்காக புகார் பெட்டிகள் வைத்து மனுக்களைப் பெற்று, அதனை 15 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும். மகளிருக்கான சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் பயன்பெற வங்கிக் கடனுதவி பெற்றுத்தரப்படும். சாலைகள் விரிவுபடுத்தவும், தரமான தார்சாலை அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத் தொகுதி மேப்பாட்டு நிதிகள், அரசுத் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பொது விநியோகத் திட்ட ரேசன் பொருட்கள் தட்டுப் பாடின்றி கிடைக்கவும், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் மற்றும் கழிப்பிட வசதிகள் தடையின்றி நிறைவேற்றித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இவ ருக்கு ஆதரவாக கூட்டணி க் கட்சியினரும் களமிறங் கி பணியாற்றி வருகின்றனர்.

Related Stories: