தேளூரில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

அரியலூர், பிப்.9: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே தேளூர் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.கால்நடை முகாமை தேளூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியம்மாள் அழகேசன் தொடங்கி வைத்தார். அரியலூர் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணைஇயக்குநர் டாக்டர் ஹமீதுஅலி, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் டாக்டர் செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூரியாஅழகரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம்,மலடு நீக்கம், செயற்கை முறை கருஊட்டல், சினை ஆய்வு, தொண்டைஅடைப்பான்,துள்ளுமாரி, தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சையளிக்கப்பட்டது.இதில் விளாங்குடி கால்நடை உதவி மருத்துவர் ரெங்கசாமி, காட்டுப்பிரிங்கியம் கால்நடை உதவி மருத்துவர் செல்வி, கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.மேலும் சிறந்த முறையில் வளர்க்கப்பட்ட 5கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 1998 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories: